Thursday, August 23, 2018

இயற்கை மருத்துவ குறிப்புகள் Part 3

இரத்த பேதியை குணப்படுத்த:

அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை ஆகியவற்றை சமஅளவு பொடிசெய்து 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீத பேதி குணமாகும்.

மூட்டுவலி குணமாக:

அத்திப்பாலை பற்று போட்டு வர மூட்டு வலி குணமாகும்.

நரம்பு தளர்ச்சி நீங்க:

தினசரி 3 பேரிச்சம்பழம் கடுக்காய் பொடி, மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.
பற்கள் உறுதியாக இருக்க:

மாவிலையை பொடி செய்து பல் துளக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.

சேற்றுபுண் குணமாக:

காய்ச்சிய வேப்பெண்ணெய் தடவி வர சேற்று புண் குணமாகும்.

மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த:

வெங்காய சாறு 50 மில்லி, பசும்பால் 400 மில்லி, அதி மதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி பதமாகும் வரை கொதிக்க காய்ச்சி பத்திரப்படுத்தவும். இதனை நாள்தோறும் 1 கரண்டி வீதம் ஆறு நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

வயிற்றுவலி குணமாக:

மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.
வயிற்று பூச்சிகள் ஒழிய:

வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் 1 கரண்டி தேன் சேர்த்து கலக்கி காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட வயிற்று பூச்சிகள் தொந்தரவு இராது.

மலச்சிக்கல் தீர:


பேயன் வாழைப்பழம் தோலுடன்  வில்லையாக நறுக்கி பனங்கல்கண்டு சேர்த்து ஆமணக்கு எண்ணெய்யில் ஊற வைக்கவும் போத்தலை அன்றாடம் வெயிலில் வைக்கவும். 3 நாட்கள் ஊறிய பின் தினசரி 1 வில்லை எண்ணெய்யுடன் உட்கொள்ளவும். மலச்சிக்கல் தீரும்

குழந்தைகளுக்கு கண் சூடுதணிய:


நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுத்து வர கண்சூடு குணமாகும்.


இரத்தத்தை சுத்தப்படுத்த:


ஒரு கேரட்  ஒரு ஆப்பிள் மற்றும் இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.



இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்...



 நன்றி...


Monday, August 20, 2018

இயற்கை மருத்துவ குறிப்புகள் Part 2

நெஞ்சுவலி குணமாக
அத்திப்பழம்:

நெஞ்சுவலி குணமாக அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திப்பழம் இருதயத்தை பலப்படுத்தும்.

விஷக்கடிக்கு மருத்துவம்
தும்பை இலை சாறு:



சிலந்தி கடிக்கு தும்பை இலை சாறு மிகவும் ஏற்றது. எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து தும்பை இலை சாறு.

சீதபேதி குணமாக:
புளியங்கொட்டை தோல் :

மாதுளை பழத்தோல் :


 புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

வயிற்று நோய் குணமாக:
சீரகம்:

சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிடி வயிற்று நோய் குணமாகும்.

காது வலி குணமாக: 
வெற்றிலை:

வெற்றிலை சாறை காதில் விட்டால் காதுவலி குணமாகும்.

நுரையீரல் குணமாக:

நாயுருவி விதை:
நாயுறுவி செடியின் விதைகளை காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து போத்தலில் வைத்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.

பேதி குணமாக:

மாங்கொட்டை பருப்பு:

மாங்கொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் தண்ணீராக போகும் பேதி நிற்கும்.

வாதநோய் குணமாக:

குப்பை மேனி: 

குப்பைமேனி இலை சாறு எடுத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர வாதநோய் குணமாகும்.

மலச்சிக்கல் குணமாக:

அகத்திக்கீரை:


அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

மேகரோகம் குணமாக:

ஆலம்பட்டை:

கருப்பட்டி:


ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும்.

நீரழிவு நோய் குணமாக:

மாந்தளிர்:


மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 1 கரண்டி வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.


இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்....

நன்றி......

Sunday, August 19, 2018

பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவ தீர்வுகள் Part 3



பெரும்பாடு பிரச்சினைக்கு:

 மாதவிடாய் நேரத்தில் அதிக ரத்தப்போக்குடன் வயிற்றுவலி சேர்ந்து வருவது பெரும்பாடு எனப்படும்.

இந்த நோயால் அவதிப்படுகிறவர்களுக்கான இயற்கை முறையில் மருத்துவ தீர்வுகள்:

நாவல் மரப்பட்டை:


நாவல் மரப்பட்டை 50 கிராம் எடுத்து, அதில் தண்ணி விட்டு நன்றாக இடித்து, 100 மில்லி வரும் அளவிற்கு தண்ணி சேர்த்து காலையில்  வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் குடித்து வந்தால் பெரும்பாடு தீரும்.

வாழைப்பூ:

ஒரு முழு வாழைப்பூவை எடுத்து கொள்ள வேண்டும்.  அதனை நன்றாக இடித்து சாற்றை பிழிந்து எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் மோர் சேர்த்து கலக்கி, காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாள் குடித்து வர மாதவிடாய் நேரத்தில் வருகின்ற வயிற்று வலியும், ரத்தப்போக்கும் சரியாகும்.

கடுக்காய்:

கடுக்காயின் தோலை மட்டும் 25 கிராம் அளவு எடுத்து கொள்ள வேண்டும். அதனை நன்றாக தட்டிப்போட்டு, 100 மில்லி தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அதனை 25 மில்லியாக சுண்ட வைத்து மூன்று  நாட்கள் குடித்து வர பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.

அருகம்புல்:

மாதுளை இலை:


அருகம்புல் 10 கிராம், மாதுளை இலை 10 கிராம் எடுத்துகொள்ள வேண்டும், அதனை 100 மில்லி தண்ணீரில் போடடு கொதிக்க வைத்து, 50 மில்லியாக சுண்ட வைத்து காலையில் பாதி, மாலையில் பாதி குடிக்க வேண்டும். இதேபோல 5 நாள் குடித்து வர மாதவிடாய் நேரத்துல வருகின்ற வயிற்றுவலி, அதிக ரத்தப்போக்கு சரியாகும்.

தும்பை பூ:

தும்பை இலையினை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அதனை நன்கு அரைத்து, பாலுடன் கலந்து சாப்பிட வேண்டும். இது போல் மூன்று நாள் சாப்பிட்டால் பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.

மாதுளை இலை:

இலந்தை மர இலை:


இலந்தை இலை, மாதுளை இலை இரண்டையும் ஒவ்வொரு கைப்பிடி அளவு  எடுத்து  அரைத்து கொள்ள வேண்டும். அதனை 200 தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு மூன்று நாள் குடித்தால் பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.

நெல்லிவற்றல்:

படிகாரம்:


கற்கண்டு:


நெல்லி வற்றல் 50கிராம், படிகாரம் 50கிராம், கல்கண்டு 50 கிராம் எடுத்து கொள்ள வேண்டும். அதனை பொடி பண்ணி வைத்துக் கொண்டு அதில் கால் ஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் மோர் சேர்த்து காலை, மாலை 10 நாள் சாப்பிட்டால் பெரும்பாடு சரியாகும்.


மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு நமது அன்பும் அரவணைப்பும் கண்டிப்பாக தேவை...

தகவல் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்...

நன்றி...




பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவ தீர்வுகள் Part 2



தாமதமான மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வுகள்:

சில பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வராமல் மிகவும் கஷ்டப்படுத்தி விடும். அவர்களுக்கான இயற்கை முறையில் தீர்வுகள்...

பெருந்துத்தி இலை: 


பெருந்துத்தி இலை - 5 எடுத்து, அதனுடன்  மிளகு ஐந்து  சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட வேண்டும். மூன்று முதல் ஐந்து நாள் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சரியாக வரும்.

மாவிலிங்கப் பட்டை:

மாவிலிங்கப்பட்டையை நன்றாக நைசாக அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் தாமதமான மாதவிடாய் தடையில்லாமல் வரும்.

சதகுப்பை:

சதக்குப்பை 50 கிராம் எடுத்து, பொன்வறுவலாக வறுத்து பொடியாக்கி, மூன்று பாகமாக பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாகத்தை இரண்டாகப் பிரித்து காலையிலும், மாலையிலும் சாப்பிட வேண்டும். கூடவே, பனைவெல்லம் கொஞ்சம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதேபோல் மூணுநாள் சாப்பிட்டு வந்தால் வராத மாதவிடாய் வந்துடும்.

     பனை வெல்லம்:

கருஞ்சீரகம்:


கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவளாக வறுத்து பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலையிலும், மாலையும்  சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறு சரியாகும்.


மாதக்கணக்கில் மாதவிடாய் வராமலிருப்பவர்களுக்கு:

வல்லாரை இலை:


வல்லாரை இலை சூரணம் கால் ஸ்பூன் எடுத்து, நெய் விட்டு குழைச்சி சாப்பிட்டு வந்தால்  மாதக்கணக்கில் வராத மாதவிடாய் ஒழுங்கா வரும்.

கல்யாண முருங்கை இலை:

கல்யாணமுருங்கை மாதவிடாய்க் கோளாறுக்கு கைகண்ட மருந்து. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிச்சிட்டு வந்தால் மாதக்கணக்கில் வராத மாதவிடாய் வரும்.


மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு நமது அன்பும் அரவணைப்பும் கண்டிப்பாக தேவை...

தகவல் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்...

நன்றி...


பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவ தீர்வுகள் Part 1

மாதவிடாய் பிரச்சினைகளுக்கு....
வெள்ளைப்படுதல் சரியாக:

ஆனைநெருஞ்சில் இலை:

ஆனைநெருஞ்சில் இலை மூணு எண்ணிக்கை எடுத்து வந்து, ஒரு டம்ளர் நீராகாரத்தில போட்டு, நன்றாக கலக்க வேண்டும். சிறிது நேரத்தில் அது கொழகொழப்பா வரும். அதை அப்படியே காலையில வெறும் வயிற்றில் தொடர்ந்து மூணு நாள் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் வராது.

மணத்தக்காளி செடி:

வேரோடு சேர்த்து, முழுசா ஒரு மணத்தக்காளி செடியை தண்ணி விட்டு அலசி, ஒரு லிட்டர் தண்ணியில போட்டு காய்ச்சி அரை லிட்டராக்கணும். அதை வெள்ளைப்படுதல் படுற இடத்துல ஊத்திக் கழுவினா... நல்ல குணம் கிடைக்கும்.

மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு நமது அன்பும் அரவணைப்பும் கண்டிப்பாக தேவை...

தகவல் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்...

நன்றி...

இயற்கை மருத்துவ குறிப்புகள் part 1


அத்திப்பழம்

அத்திபழம் தினமும் மூன்று தண்ணீரில் இட்டு காலையில் வெறும் வயிற்றில் குடிப்பத்தாலும்  இரவு பாலில் இரண்டு மூன்று இட்டு குடிப்பதாலும் உடல் சார்ந்த அனைத்தையும் சத்துகளுடனும் உடலையும் பலபடுத்துகிறது...

வாழைப்பழம்:

தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அணுகாது.

கசகசா

முகம் வழுவழுப்பாக இருக்க...
கசகசாவை பசு தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்க போகுமுன் தடவி வந்தால் முகம் பளபளப்புடன் சுருக்கங்கள் நீங்கி பொலிவு தரும்.

இரத்த சோகையை போக்க:

பீர்க்கன்காய் வேர் கசாயம் செய்து சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும்.

கர்ப்பிணிகள் சாப்பிட சிறந்தது:

தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை, கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

குழந்தைகளுக்கு:

குழந்தைகளுகள் கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது.

வெட்டுக்காயம் குணமாக:

நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.

சுகப்பிரவசமாக:

ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

உடல் அரிப்பு குணம் பெற:

 வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.

காதில் சீழ்வடிதல் குணமாக:


வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்...



சர்க்கரை வியாதியை குறைக்கும் கஷாயம்

சர்க்கரை வியாதியை குறைக்கும்  கஷாயம்... நான்கு வெற்றிலை, முருங்கைக்கீரை சிறிதளவு, வேப்பங்கொழுந்து இரண்டு கொத்து போன்றவற்றை சுத்தம் செய்த...