Saturday, July 14, 2018

பூக்களின் மருத்துவ குணங்கள்

மணம் வீசும் மலர்களின்
மருத்துவ குணங்கள்

                         இலுப்பைப்பூ


இழுப்பைப் பூவை பாலில் போட்டு
காய்ச்சி தினம் ஒரு வேளை 
பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும்.
மேலும் தாக்கத்தை விரட்டியடிக்கும்.

அகத்திப் பூ 


அகத்திப் பூவை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கி
பாலில் காய்ச்சி தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு , பித்த சூடு நீங்கும்.

நெல்லிப்பூ 


நெல்லிப்பூ உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
இதனுடன் விழுதி இலை , வாத நாராயணா இலை சேர்த்து 
சாப்பிட சுகபேதி உண்டாகும்.
மலச்சிக்கலுக்கு மிகவும் சிறந்தது.

மகிழம் பூ


மகிழம் பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலைபாரம்
போன்ற நோய்களை நீக்கிவிடும்.

முருங்கைப்பூ 


ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும்.
வயிற்றில் உள்ள கிருமிகளை ஒழிக்கும்.

குங்குமப்பூ 


கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒரு வேளைக்கு 5 முதல் 10 இதழ்களை பாலில் போட்டு காய்ச்சி குடித்து வர சீதள சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.
தலை குளித்த பிறகு வெற்றிலையில் 5 முதல் 10 இதழ்களை வைத்து சாப்பிட்டால் சளி பிடிக்காது.
பிறக்கும் குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கும்.

ஆவாரம் பூ


ஆவாரம்பூவை உலர்த்தி வேளை ஒன்றிக்கு 15 கிராம்
நீரில் போட்டு கஷாயமாக்கி பால் , சர்க்கரை கலந்து காப்பியாக பருகி வந்தால் 
உடல் சூடு, நீரழிவு, நீர்க்கடுப்பு போன்ற நோய்கள் தீரும்.
ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் சேர்த்து உடலில் தேய்த்து குளித்தால் வேர்வையால் ஏற்படும் உடல் துர்நாற்றம் நீங்கும்.
தோல் வியாதிகள் குணமாகும். 
இரத்த விருத்திக்கு மிக சிறந்தது.

தாழம்பூ


தாழம்பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் எந்த கிருமியும் நெருங்காது.
தாழம்பூவின் சாறு உடல் வெப்பத்தை குறைத்து அம்மை நோயை தடுக்கும்.
இதயத்திற்கு வலிமையூட்டி உடல் வனப்பை அதிகரிக்கும்.

செம்பருத்தி பூ


இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் நெஞ்சு வலியால் அவதிப்படுபவர்கள் செம்பருத்திப்பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி கலை மாலை இருவேளையும் குடித்து வந்தால் இருதயம் பலமாகும்.
இதில் தங்க சத்து நிறைந்தது.

மல்லிகைப்பூ


கண்பார்வையை கூர்மையாக்கும்.
காம உணர்ச்சியை தூண்டும்.
ஒரு நல்ல கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

கருச்செம்பைப்பூ


இந்தப்பூவையும், நல்லெண்ணையும் சேர்த்து காய்ச்சி தொடர்ந்து குளித்து வந்தால் தலையில் ஏற்பட்ட சீதனத்தை கண்டிக்கும்.
தலைவலி, தலைபாரம், கழுத்து நரம்பு வலி போன்றவற்றையும் நீக்கும்.

ரோஜாப்பூ 


ரோஜாப்பூவின் மணம் இருதயத்திற்கு வலிமை தடுக்கிறது.
பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சிசளி நீங்கும்.
இரத்த விருத்திக்கும் ஏற்றது.

வேப்பம்பூ 


வேப்பம்பூ மிகச்சிறந்த கிருமி நாசினி.
உடல் குளிர்ச்சி பெற சிறந்தது.
வேப்பம்பூ வீட்டில் இருந்தால் சின்ன சிறு கிருமிகள் கூட உள்ளே வராது.

வாசனை மிக்க மலர்களின் மருத்துவ குணங்களை பற்றி பார்த்தோம். 

நன்றி...





Wednesday, July 11, 2018

கம்பின் மருத்துவ பயன்கள்


கம்பு - 

இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் ஒன்று கம்பு . 
வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடியது கம்பு.  
நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர்.காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். 

ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்து இல்லாத உணவுகளை நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது. 

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும்.
இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும். மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். 

அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர்.
அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.

 வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்
.
உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.
கம்பின் மகத்துவம் :

* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.
* இதயத்தை வலுவாக்கும்.
* சிறுநீரைப் பெருக்கும்.
* நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
* இரத்தத்தை சுத்தமாக்கும்.
* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.
* நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.
* தாதுவை விருத்தி செய்யும்.
* இளநரையைப் போக்கும்.
குறிப்பு:
அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

முருங்கை என்னும் மகா மூலிகை Part 2

முருங்கைக்காய்,
 முருங்கைப்பூ,
முருங்கைக்காய் பிஞ்சு,
முருங்கை பிசின்,
 முருங்கைப்பட்டை,
 முருங்கை வேரின்
மருத்துவ குணங்கள்....

சர்க்கரை வியாதியை குறைக்கும் கஷாயம்

சர்க்கரை வியாதியை குறைக்கும்  கஷாயம்... நான்கு வெற்றிலை, முருங்கைக்கீரை சிறிதளவு, வேப்பங்கொழுந்து இரண்டு கொத்து போன்றவற்றை சுத்தம் செய்த...