அத்திப்பழம்
அத்திபழம் தினமும் மூன்று தண்ணீரில் இட்டு காலையில் வெறும் வயிற்றில் குடிப்பத்தாலும் இரவு பாலில் இரண்டு மூன்று இட்டு குடிப்பதாலும் உடல் சார்ந்த அனைத்தையும் சத்துகளுடனும் உடலையும் பலபடுத்துகிறது...
வாழைப்பழம்:
தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அணுகாது.
கசகசா
முகம் வழுவழுப்பாக இருக்க...
கசகசாவை பசு தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்க போகுமுன் தடவி வந்தால் முகம் பளபளப்புடன் சுருக்கங்கள் நீங்கி பொலிவு தரும்.
இரத்த சோகையை போக்க:
பீர்க்கன்காய் வேர் கசாயம் செய்து சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும்.
கர்ப்பிணிகள் சாப்பிட சிறந்தது:
தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை, கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.
குழந்தைகளுக்கு:
குழந்தைகளுகள் கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது.
வெட்டுக்காயம் குணமாக:
நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.
சுகப்பிரவசமாக:
ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.
உடல் அரிப்பு குணம் பெற:
வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.
காதில் சீழ்வடிதல் குணமாக:
வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்...











No comments:
Post a Comment