Sunday, August 19, 2018

பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவ தீர்வுகள் Part 2



தாமதமான மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வுகள்:

சில பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வராமல் மிகவும் கஷ்டப்படுத்தி விடும். அவர்களுக்கான இயற்கை முறையில் தீர்வுகள்...

பெருந்துத்தி இலை: 


பெருந்துத்தி இலை - 5 எடுத்து, அதனுடன்  மிளகு ஐந்து  சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட வேண்டும். மூன்று முதல் ஐந்து நாள் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சரியாக வரும்.

மாவிலிங்கப் பட்டை:

மாவிலிங்கப்பட்டையை நன்றாக நைசாக அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் தாமதமான மாதவிடாய் தடையில்லாமல் வரும்.

சதகுப்பை:

சதக்குப்பை 50 கிராம் எடுத்து, பொன்வறுவலாக வறுத்து பொடியாக்கி, மூன்று பாகமாக பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாகத்தை இரண்டாகப் பிரித்து காலையிலும், மாலையிலும் சாப்பிட வேண்டும். கூடவே, பனைவெல்லம் கொஞ்சம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதேபோல் மூணுநாள் சாப்பிட்டு வந்தால் வராத மாதவிடாய் வந்துடும்.

     பனை வெல்லம்:

கருஞ்சீரகம்:


கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவளாக வறுத்து பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலையிலும், மாலையும்  சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறு சரியாகும்.


மாதக்கணக்கில் மாதவிடாய் வராமலிருப்பவர்களுக்கு:

வல்லாரை இலை:


வல்லாரை இலை சூரணம் கால் ஸ்பூன் எடுத்து, நெய் விட்டு குழைச்சி சாப்பிட்டு வந்தால்  மாதக்கணக்கில் வராத மாதவிடாய் ஒழுங்கா வரும்.

கல்யாண முருங்கை இலை:

கல்யாணமுருங்கை மாதவிடாய்க் கோளாறுக்கு கைகண்ட மருந்து. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிச்சிட்டு வந்தால் மாதக்கணக்கில் வராத மாதவிடாய் வரும்.


மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு நமது அன்பும் அரவணைப்பும் கண்டிப்பாக தேவை...

தகவல் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்...

நன்றி...


பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவ தீர்வுகள் Part 1

மாதவிடாய் பிரச்சினைகளுக்கு....
வெள்ளைப்படுதல் சரியாக:

ஆனைநெருஞ்சில் இலை:

ஆனைநெருஞ்சில் இலை மூணு எண்ணிக்கை எடுத்து வந்து, ஒரு டம்ளர் நீராகாரத்தில போட்டு, நன்றாக கலக்க வேண்டும். சிறிது நேரத்தில் அது கொழகொழப்பா வரும். அதை அப்படியே காலையில வெறும் வயிற்றில் தொடர்ந்து மூணு நாள் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் வராது.

மணத்தக்காளி செடி:

வேரோடு சேர்த்து, முழுசா ஒரு மணத்தக்காளி செடியை தண்ணி விட்டு அலசி, ஒரு லிட்டர் தண்ணியில போட்டு காய்ச்சி அரை லிட்டராக்கணும். அதை வெள்ளைப்படுதல் படுற இடத்துல ஊத்திக் கழுவினா... நல்ல குணம் கிடைக்கும்.

மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு நமது அன்பும் அரவணைப்பும் கண்டிப்பாக தேவை...

தகவல் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்...

நன்றி...

இயற்கை மருத்துவ குறிப்புகள் part 1


அத்திப்பழம்

அத்திபழம் தினமும் மூன்று தண்ணீரில் இட்டு காலையில் வெறும் வயிற்றில் குடிப்பத்தாலும்  இரவு பாலில் இரண்டு மூன்று இட்டு குடிப்பதாலும் உடல் சார்ந்த அனைத்தையும் சத்துகளுடனும் உடலையும் பலபடுத்துகிறது...

வாழைப்பழம்:

தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அணுகாது.

கசகசா

முகம் வழுவழுப்பாக இருக்க...
கசகசாவை பசு தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்க போகுமுன் தடவி வந்தால் முகம் பளபளப்புடன் சுருக்கங்கள் நீங்கி பொலிவு தரும்.

இரத்த சோகையை போக்க:

பீர்க்கன்காய் வேர் கசாயம் செய்து சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும்.

கர்ப்பிணிகள் சாப்பிட சிறந்தது:

தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை, கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

குழந்தைகளுக்கு:

குழந்தைகளுகள் கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது.

வெட்டுக்காயம் குணமாக:

நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.

சுகப்பிரவசமாக:

ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

உடல் அரிப்பு குணம் பெற:

 வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.

காதில் சீழ்வடிதல் குணமாக:


வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்...



Wednesday, August 1, 2018

நிலவேம்பின் மருத்துவ குணங்கள் ....


நிலவேம்பு:

கசப்புச் சுவையுடைய நீண்ட இலைகளையும் நாற்கோண வடிவில் அமைந்த தண்டுகளையும் உடைய சிறுசெடி இனமாகும். கொப்பும் கிளையுமாக 2 1/2 அடி வரை வளரும். செடி முழுவதும் மருத்துவக் குணம் உடையது. காய்ச்சலைப் போக்கவும், பசி உண்டாக்கவும் தாதுவைப் பலப்படுத்தவும், முறை நோயைப் போக்கும் குணமும் உடையது. எல்லா மண்ணிலும் தானாகவே வளரக்கூடியது.
வேறு பெயர்கள்: சாகண்ட தித்தம், நித்தார கோசா, கிராதித்தம், கிரார்த்தம், பூ நிம்பர், சாரி தீர்த்தம், கயிராதோ, லேமசனம், சிலேத்து மாதி சோபாக்னி.
தாவரவியல் பெயர்: Andrographis paniculata
மருத்துவக் குணங்கள்:

நில வேம்பு இலை, கண்டங்கத்திரி வேல் வகைக்கு கைப்பிடியளவு எடுத்து, சுக்கு 10 கிராம், சேர்த்து அரைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்து வர, மலேரியா காய்ச்சல் குணமாகும்.

நிலவேம்பு இலையுடன், குப்பை மேனி, மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை சமஅளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து ஒரு டம்ளர் பசும் பாலிலோ அல்லது ஆட்டுப் பாலிலோ கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, மஞ்சள் காமாலை குணமாகும்.

நில வேம்பு, சுக்கு, திப்பிலி, சீந்திக்கொடி வகைக்கு 10 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவாக மூன்று வேளை குடித்து வர, குழந்தைகளுக்கு வருகின்ற எல்லாவிதமான காய்ச்சலும் குணமாகும்.


இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்....




இயற்கையோடு வாழ்வோம்...
இயற்கையை காப்போம்...



ஆண்மை குறைவிற்கு எளிய மருத்துவம் மற்றும் பல மருத்துவ குறிப்புகள்

நரம்புத்தளர்ச்சிக்கு அருகம் புல்:

இந்த அருகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்த ஜெர்மானியர் சப்பாத்தியுடன் சேர்த்து ரொட்டிசெய்து சாப்பிடுகின்றனர். இந்தப் புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்த நீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால், நரம்புத்தளர்ச்சி, மலச்சிக்கல், இரத்த அழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும்.
உஷ்ணத்தைத் தணிக்கும் அகத்திக்கீரை:

அகத்திக்கீரை உள்ளே இருக்கும் உஷ்ணத்தைத் தணிக்கும் தன்மை வாய்ந்தது. தாய்ப்பால் சுரப்பை கூட்டவல்லது. இந்தக்கீரை மூளையைப் பலப்படுத்தவல்லது. இது பித்தத்தை தணிக்க வல்லது. இதை உலர்த்தி சூரணம் செய்து காலை மாலை வெந்நீரில் குடிக்கலாம். உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இது வாய்வு கூடிய கீரை எனவே வாய்வுப் பிரச்சினை உள்ளவர்கள் வாய்வைக் கண்டிக்கும் உள்ளி, பெருங்காயம் சேர்த்துக் கொள்வது அவசியம். தொண்டையில் புண் இருப்பின் இந்தக்கீரையை தின்றால் விரைவில் குணமாகும்.
அஜீரணசக்திக்கு:



சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி சேர்த்து தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.
அரைக்கருப்பன் சரியாக:

இது அரையாப்பு, மர்மஸ்தானங்களில் ஏற்படும் ஒருவித அரிப்புச் செறியாகும். இதற்கு கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள், ஆகியவற்றை வேகவைத்து அவற்றை தேங்காய்ப் பாலில் ஊறவைத்து பின் வேகவைத்து அதை நன்கு சுண்டக்காய்ச்சி மென்மையான சூட்டில் அந்த இடங்களில் பூசினால் சில நாட்களில் குணமாகிவிடும். பப்பாளிப்பழச்சாறும் பசும்பாலும் கலந்து பூசலாம். தரைப்பசலிக்கீரையும் மஞ்சள்தூளும் சேர்த்துப் பூசினாலும் குணமாகிவிடும்.
ஆசனவாசல் குடைச்சலுக்கு:

இப்படியான அரிப்புக்குக் காரணம் வயிற்றில் புழுக்கள் இருக்கும். இந்நோய் பிள்ளைகளுக்கும் மூலவியாதி இருப்பவர்களுக்கும் காணப்படும். இதற்கு பாகல் இலை அல்லது முள்முருங்கை இலை-தளிர் இவற்றில் ஏதாவது ஒன்றை அரைத்து தேனுடன் கலந்து பூசினால் அரிப்பு குணமாகும். அதன்பின் மூலகாரணம் அறிந்து தகுந்த சிகிச்சை செய்யவேண்டும். கருஞ்சீரகத்தையும் தேனுடன் அரைத்து பூசினால் அரிப்பு குணமாகும்.
ஆரோக்கியத்திற்கு:



தேக ஆரோக்கியத்திற்கு உணவு முக்கியம். தகுதியான உணவை அளவுடன் உண்ணவேண்டும். அரைவயிறு உணவும், கால்வயிறு தண்­ரும், கால்வயிறு காலியாகவும் இருப்பது அவசியம். தினம் உடற்பயிற்சி, யோகாசனம் செய்தால் ஆரோக்கியம் கிடைக்கும்.
ஆண்மை வலுப்பெற:

அரசம்பழத்தை பாலில்போட்டு காய்ச்சி வெல்லத்துடன் தினம் பருகிவந்தால் ஆண்மை வலுப்பெறும். தளர்ச்சி நீங்கும்.
 ஓரிலைத்தாமரையை அரைத்து பாலில் கலந்து குடித்தாலும் தளர்ச்சி நீங்கும்.
செம்பருத்திப்பூவை உலர்த்தி இடித்து நீரில் கொதிக்கவைத்து வென்சூட்டில் சர்க்கரை சேர்த்து குடித்தால் பலம் கிடைக்கும்

. பேரீச்சம்பழம், உழுந்து இவைகளை தேனுடன் சேர்த்து அருந்தினால் தளர்வு நீங்கும்.
 இலுப்பைப்பூ கஷாயத்துடன் பசும்பால் சேர்த்து குடித்துவரின் ஆண்மை வலுப்பெறும்.

Tuesday, July 31, 2018

அம்மை நோயை தடுக்க சில மருத்துவ குறிப்புக்கள்

அம்மைநோயைத் தடுக்க!

அம்மைநோயைத் தடுக்கவும், அம்மைநோய் வேகத்தை தணிக்கவும்,
சில எளிய மருத்துவக் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அம்மைநோயைத் தடுக்க:

ஒரு முற்றிய கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம்.

அம்மைநோய் வேகத்தை தணிக்க:

பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும்.

செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைவாசியாக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கொடுத்தால் வேகம் தணியும்.

அம்மைத் தழும்புகள் போக

கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவிடும். தினம் சந்தனச் சோப்பு போடவும்.

Thursday, July 19, 2018

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வாழைத்தண்டு... மற்றும் பல மருத்துவ குணங்கள்...

*இன்றைய மருத்துவ பலன் 
Health Education. Madurai.*         

செரிமான   கோளாறு 
    உடனடி தீர்வு!!

வாழைத்தண்டு

வாழைத்தண்டு தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறும்.
எலுமிச்சை, ஏலக்காய் கலந்து வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வர டாக்ஸின்கள் அதிகமாக வெளியேறி உடல் புத்துணர்வு பெறும். 

கிட்னி ஸ்டோன் :

வாழைத்தண்டு சாறு குடித்து வர அது கிட்னி கற்களை கரைக்க உதவிடும். வாழைதண்டு சாறில் ஏலக்காயை தட்டிப்போடுங்கள்.
 இதனால் கிட்னி கற்களினால் ஏற்படும் வலி குறைந்திடும்.வாழைத்தண்டு சாற்றில் லெமன் ஜூஸ் கலந்து குடித்து வந்தால் கற்கள் உருவாகமல் தடுக்க முடியும். வாழைத்தண்டில் இருக்கும் பொட்டாசியம், எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் இணைந்து பொட்டாசியம் சிட்ரேட் உருவாகிடும். இது கிட்னி கற்கள் வராமல் தடுக்கும். 
உடல் எடை குறைய :

சீக்கிரமாக உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் வாழைத்தண்டை சேர்த்துக் கொள்ளுங்கள். இது ஆரோக்கியமானதும் கூட.
சமைத்தோ அல்லது சாறாகவோ வாழைத்தண்டை எடுத்துக் கொள்ளலாம். இதில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால். நீண்ட நேரம் பசி எடுக்காது. இதனால் தேவையற்ற உணவுகள் எடுத்துக் கொள்வது குறைந்திடும். 

தொப்பையை குறைக்க :

வாழைத்தண்டில் இருக்கும் நார்ச்சத்து கொழுப்பை கரைத்திடும். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை கரைக்க உதவிடும். வாழைத்தண்டு சாற்றுடன் இஞ்சி சேர்த்து வாரம் இரண்டு முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதில் கலோரியும் குறைவு என்பதால் பயமில்லாமல் சாப்பிடலாம்.

அசிடிட்டி தொந்தரவு :

எது சாப்பிட்டாலும் ஜீரணமாகாதவர்கள், அடிக்கடி ஜீரணக்கோளாறினால் அவதிப்படுகிறவர்கள் வாழைத்தண்டு சாப்பிட்டு வர விரைவில் பலன் உண்டு. இதைச் சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உணவு ஜீரணமாவதற்கான ஆசிட்டும் அதிகரிப்பதால் உணவு சீக்கிரமாக செரிக்கப்படும். இதனால் ஜீரணக்கோளாறுகள் தவிர்க்கப்படும்.

சர்க்கரை நோய் :

வாழைத்தண்டு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது நம் உடலில் உள்ள இன்ஸுலின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவிடும். இதில் இருக்கும் துவர்ப்புச் சுவையினால் சர்க்கரை நோய்க்கு இயற்கை மருந்தாக அமைந்திடும். கிட்னி நன்றாக செயல்பட வேண்டுமானால் நீங்கள் உங்கள் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். 

ரத்த சோகை :

வாழைத்தண்டில் அதிகப்படியான இரும்புச்சத்து மற்றும் விட்டமின் பி6 இருக்கிறது. இதனை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் அது நம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். இதனால் ரத்தசோகை ஏற்படுவது தவிர்க்கப்படும்.

வாழைத்தண்டின் மருத்துவ குணங்களை பற்றி பார்த்தோம்...
தகவல் பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கும் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்கள்...
நன்றி....

சர்க்கரை வியாதியை குறைக்கும் கஷாயம்

சர்க்கரை வியாதியை குறைக்கும்  கஷாயம்... நான்கு வெற்றிலை, முருங்கைக்கீரை சிறிதளவு, வேப்பங்கொழுந்து இரண்டு கொத்து போன்றவற்றை சுத்தம் செய்த...