Thursday, September 20, 2018

நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு.



தொப்புளில் எண்ணை போடுங்கள்!
நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.

அறிவியல் படி, கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.

நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!
அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும்.

காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.

நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது.

நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா? நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.

தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.

கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

முழங்கால் வலி: தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்?
நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் .

ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

அவசியம் பகிருங்கள்...


அந்நிய குளிர்பானங்களை தவிர்க்கவும்

கரு கலைப்பு
🔴 கரு தரித்த ஒரு பெண், வெறும் வயிற்றில் 7 UP ஐ குடித்தல் உடனே கரு களைந்து விடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ...!!
🔴 புது மணதம்பதியினருக்கு, பிரியாணி விருந்து கொடுத்து விட்டு செரிக்கட்டும் என 7 UP ஐ கொடுத்தனால், எத்தனை பேர் கரு தரிக்காமால் இருக்கிறார்கள் என்பது  எத்தனை பேருக்கு தெரியும் ...!!
🔴 அதிகமாக கிட்னி ஃபெயிலியர் உருவாவதற்கு முக்கிய காரணம் இந்த கோக், பெப்சி, மற்றும் 7 அப் பானங்கள் தான் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்...!!
🔴 இந்த பெப்சியை தயாரிக்கும் நிறுவனம் தான் கிட்னி கல்லை கரைக்க மருந்தும் அதற்குள்ள மாத்திரைகளும் தயாரிக்கிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ..!!
🔴 " இது இலுமிநாட்டிகளின் நரி தந்திரம் ...!!
🔴 இவர்களுக்கு பணம் மட்டுமே பிரதானம் ...!!
🔴 விழிப்புணர்வு பதிவு 🔴
*Pesticide Percentage (%) in cold drinks released from IMA (Indian Medical Association) recently*
1     Thums up      7.2%
2     Coke              9.4%
3     7 UP             12.5%
4     Mirinda         20.7%
5     Pepsi            10.9%
6     Fanta              29.1%
7    Sprite                 5.3%
8    Frooti               24.5%
9    Maaza              19.3%
*It's very dangerous to the Human Liver, Results in Cancer*
*Please pass it to all known persons in your contact*
  நண்பர்களே இந்தகுளிர்பானங்களை குடிக்காதீர்கள். உயிர் அழிந்து விடும். நல்லெண்ண தகவல்.
அனைவருக்கும் பகிருங்கள்.
Pls

Importance of “Rasam” in our Diet

Importance of “Rasam” in our Diet

ரசம் என்னும் சூப்பர் திரவத்தைக் கூடியவரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும். இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான்.

புளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்துமல்லி ரசம் என்று பலவிதமான சுவைகளின் ரசத்தைத் தயாரித்தாலும் இந்தப் பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம் பெற்றுவிடும்.

நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம். வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக் குறைபாடுகளையும் இது போக்கிவிடுகிறது.

அயல் நாட்டினர் உணவு முறையில் சூப்புக்கு முதலிடம் கொடுத்துள்ளனர். இது, ரசத்தின் மறுவடிவமே. ரசமோ, சூப்போ எது சாப்பிட்டாலும் பசியின்மை, செரியாமை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய்விடும்.
சித்த வைத்தியப்படி உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும்.

ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, கண்களில் ஏற்படும் காட்ராக்ட் கோளாறு, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.

ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது.

நரம்புகள் சாந்தடைவதால் நோய்கள் குணமாகின்றன. ஆண்மை அதிகரிக்கிறது. அபார்ஷன் ஆகாமல் தவிர்த்துவிடுகிறது. புரதமும் மாவுச்சத்தும் பெருங்காயத்தில் தக்க அளவில் உள்ளது.

கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது. உடல் சூடு, நாக்கு வறட்சி முதலியன அகலுகின்றன. கண்களின் பார்வைத் திறன் அதிகரிக்கிறது.

மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கிறது. வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது.

கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று தின்பது நல்லது. கறி வேப்பிலையால் ரசம் மூலிகை டானிக்காக உயர்ந்து நிற்கிறது.

ரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு, ஆஸ்துமா, இதயக் கோளாறு, குடல் பூச்சிகள், சிறுநீரகத்தில் உள்ள கற்கள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றைக் கட்டுப் படுத்துகிறது.

இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்கள் தடித்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறது. தக்க அளவில் புரதமும் நோய்களைக் குணமாக்கும் ‘பி’ வைட்டமின்களும், ‘சி’ வைட்டமின் களும் பூண்டில் இருப்பதால் நுரையீரல் கோளாறு, காய்ச்சல் போன்றவையும் எட்டிப் பார்க்காது.

தலைவலி, தொடர்ந்து இருமல், மூக்கு ஒழுகுதல் போன்றவை ரசத்தில் சேரும் இஞ்சியால் எளிதில் குணம் பெறுகின்றன. ஆண்மைக்குறைவையும் போக்குகிறது. மூச்சுக்குழல், ஆஸ்துமா, வறட்டு இருமல், நுரையீரலில் காசம் முதலியவற்றையும் குணமாக்கி, குளிர்காய்ச்சலையும் தடுக்கிறது இஞ்சி. ஜலதோஷம், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை முதலியவற்றை ரசத்தில் சேரும் மிளகு, சக்தி வாய்ந்த உணவு மருந்தாக இருந்து குணப்படுத்துகிறது.

தசைவலியும், மூட்டுவலியும் குணமாகின்றன. வாதம், பித்தம், கபம் வராமல் தடுக்கிறது.

ரசத்தில் சேரும் கடுகு உடம்பில் குடைச்சல், தலை சுற்றல் முதலியவற்றைத் தடுக்கிறது.

வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கி வயிற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

ரசத்தில் புளியின் அளவை மட்டும் மிகக் குறைவாகச் சேருங்கள்.

மழைக்காலத்தில் உடல் நலத்தைக் காத்து முன்கூட்டியே நோய்களைத் தடுத்துவிடுவதால், ரசத்தின் உதவியால் ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் இன்றி வாழலாம். வெயில் காலத்தில் நாக்கு வறட்சி, அதிகக் காப்பி, டீ முதலியவற்றால் வரும் பித்தம் முதலிய வற்றையும், தினசரி உணவில் சேரும் ரசம் உணவு மருந்தாகக் குணப்படுத்தும்.

எனவே, ரசம் என்னும் சூப்பர் திரவத்தைக் கூடியவரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

சுகப்பிரசவமாக சில குறிப்புகள்...

சுகப்பிரசவம்

கர்ப்பிணி பெண்கள் எளிதாகக் குழந்தை பெற விதி:

1)சிவனார் வேம்பு கொண்டுவந்து முலைப்பாலில் அரைத்து தொப்புளில் சுற்றி தளமாய்ப்பூசினால் சீக்கிரத்தில் பிரசவமாகும்.

2) பசலையிலைச்சாறு அரிக்கால்படி, நல்லெண்ணெய் அரிக்கால்படி இவ்விரண்டையும் ஒன்றாய்க் கலந்து கொடுக்க எளிதில் பிரசவமாகும். யாதொரு வலியும் இல்லாமல் நஞ்சுக்கொடியும் விழும்

வாழ்க வளமுடன்.

 நமது பாரம்பரிய மருத்துவமுறையை மீட்டெடுப்போம்.
அவசரத்திற்க்கு மட்டும் அலோபதியை பயன் படுத்துவோம்.

இதனை அனைவரும் பகிருங்கள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்....



உடம்பில் தாதுவைப் பலப்படுத்த பல மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்டது தங்க பஸ்பம்.

ஆனால், எந்தச் செலவும் இல்லாமல் இயற்கையிலேயே இலவசமாக கிடைக்கிறது ஒரு மூலிகை. இதை இன்ஸ்டன்ட் காபி போல, இன்ஸ்டன்ட்டாக பயன்படுத்தலாம். இந்த மூலிகைக்குத் தாதுவை அதிகரிக்கும் தன்மை உண்டு. அதனால் இதை வெள்ளி பஸ்பம் என்கிறார்கள்.
நாம் தினமும் கடக்கும் சாலையோரங்கள், விவசாய நிலங்கள், வரப்புகள், வாய்க்கால் ஓரங்களில் சர்வசாதாரணமாக ஒரு களைச் செடியைப் போல் முளைத்து கிடக்கிறது அந்த மூலிகை. நாம் அதன் மகத்துவம் அறியாமல், காலில் போட்டு மிதித்துவிட்டு கடந்து கொண்டேயிருக்கிறோம். ஆனாலும் நம்மீது கோபம் கொள்ளமால், தனது விதைகள் மூலமாக, தனது சந்ததிகளை வளர்த்துக்கொண்டே இருக்கிறது அந்த மூலிகை. மனித குலத்துக்குத் தேவையான பல அரிய மருத்துவ குணங்களைக் கொண்ட அந்த மூலிகையின் பெயர் அம்மான் பச்சரிசி.

அம்மான் பச்சரிசி

 இப் ஃபோர்பியா ஹிர்டா(Euphorbia hirta) என்ற தாவரவியல் பெயர் கொண்ட அம்மான் பச்சரிசி இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. தீக்காயங்கள், சூட்டினால் ஏற்படும் கட்டிகள், வயிற்றுப்போக்கு, நமைச்சல் ஆகியற்றுக்கு இது அருமருந்து.
இந்தச் செடியைப் பறித்து நிழலில் உலர்த்தி பொடி செய்துகொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் பொடியுடன் சமஅளவு கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து தினமும் இருவேளை குடித்து வந்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிக்கும்.
 இந்தச் செடியின் எந்தப் பாகத்தை உடைத்தாலும் பால் வரும். அதனால் இதை, ‘சித்திரைபாலாடை’ எனவும் அழைக்கிறார்கள் சித்த மருத்துவர்கள். இந்தப் பால் மருத்துவ தன்மை வாய்ந்தது. உதடு, நாக்கு போன்ற பகுதிகளில் ஏற்படும் வெடிப்புகளை போக்கும் தன்மை இந்த பாலுக்கு உண்டு.

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கொடுப்பது தாய்ப்பால். ஆனால், நவீன உணவுப் பழக்கம் காரணமாக பல பெண்களுக்குப் பால் சுரப்பதேயில்லை. அதனால் ஆவின்பால் குடித்து வளர்கிறது வருங்கால இந்தியா. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியில்லாமல் ஐந்து வயதிலேயே கண்ணாடி அணிந்துக்கொள்கிறார்கள். இன்னும் சில நோய்தொற்றுக்கு ஆளாகிறார்கள். ஆரோக்கியமான குழந்தைகளை தாய்ப்பால் தான் உருவாக்க முடியும். சரி என்ன செய்ய அதான் இல்லியே என ஆதங்கப்படும் தாய்மார்களுக்கு உதவுவதற்காகவே காத்திருக்கிறது அம்மான் பச்சரிசி. இந்த மூலிகையின் பூக்களை சுத்தம் செய்து, பசும் பால் விட்டு அரைத்து, காலை, பசும்பாலில் கலந்து காலை, மாலை இருவேளையும் பருகி வந்தால் பால் நன்றாக சுரக்கும்.

உடம்பில் ஆங்காங்கே சின்னச் சின்னக் கட்டியாக தொங்கும் மரு, இன்றைக்கு பலபேருக்குத் தொல்லையாக இருக்கிறது. இந்த மருவை சுலபமாக அகற்ற உதவுகிறது அம்மான் பச்சரிசி. இதன் தண்டை உடைத்தால் பால் வரும். அந்தப் பாலை மருவின் வேர் பகுதியில் தடவி வர வேண்டும். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் மரு உதிர்ந்துவிடும். மருவின் தன்மைக்கு ஏற்ப மூன்று முதல் ஏழு நாள்களில் உதிர்ந்து விடும். மிகச் சுலபமாக மருவை அகற்ற இதைவிட சிறந்த வழியேதுமில்லை. அதனால்தான் இதை ‘மருஅகற்றி’ என அழைத்தனர் சித்தர் பெருமக்கள். அதேப் போல, சிலருக்கு காலில் ஆணி ஏற்படும். இதை அறுவைசிகிச்சை மூலமாக அகற்றுவார்கள். ஆனால், அது தேவையில்லாத ஒன்று. அம்மான் பச்சரிசி பாலை ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், வலி குறைந்து சிறிது நாளில் ஆணி மறைந்துவிடும்.

    ‘காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்
    சேர்ந்த தினவிவைகள் தேகம்விட்டுப்பேர்ந் தொன்றாய்
    ஓடுமம்மான் பச்சரிசிக் குண்மை இனத்துடனே
    கூடுமம்மா னொத்த கண்ணாய் கூறு!’ (அகத்தியர் குணபாடல்)

இதன் இலைச் சாறை பருகினால் உடல்மெலிவு, மலச்சிக்கல், படை, நமைச்சல் போகும் என்கிறது இந்த பாடல்.

வெள்ளைப்படுதல் பெண்களுக்குள்ள பெரிய பிரச்னை. அதற்கு அருமையான தீர்வு அம்மான் பச்சரியிடம் இருக்கிறது. இதன் இலையைப் பறித்து, கழுவி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தச் சாறுடன் மோர் கலந்து காலை, மாலை இருவேளையும் பருகி வந்தால் ஐந்தே நாளில் வெள்ளைப்படுதல் நின்றுபோகும் என்கிறது சித்த மருத்துவம்.

அதெல்லாம் சரி, அம்மான் பச்சரிசி எப்படி வெள்ளி பஸ்பமாகும்?

அம்மான் பச்சரிசி இலை, தூதுவேளை இலை ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து பாசிபருப்பு, உளுந்தம் பருப்பு, தேங்காய் துருவல் ஆகியவற்றுடன் சேர்த்து கூட்டு செய்து, நெய் சேர்த்து உண்டு வந்தால் உடம்பில் தாது பலப்படும். விந்தணுக்கள் அதிகரிக்கும். அதனால் தான் சித்த புருஷர்கள் இதை வெள்ளி பஸ்பம் என்கிறார்கள். இத்தனை சிறப்புகளை வைத்திருக்கும் அம்மான் பச்சரிசி மூலிகையை சின்னச் சின்னத் தொட்டிகள் வைத்து வீடுகளில் கூட வளர்க்கலாம்.

இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்....


Whatsapp ல் இருந்து பகிர்ந்தது.....

பல நோய்களை தீர்க்கும் கொய்யா இலை டீ

*கொய்யா இலையின் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!*

பலருக்கும் கொய்யா பழத்தின் நன்மைகளைப் பற்றி தான் தெரியும். ஆனால் கொய்யா பழத்தின் இலையில் நிறைந்துள்ள மருத்துவ குணத்தால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணலாம்.

 கொய்யா இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆன்டி-பாக்டீரியல் தன்மை மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை போன்றவைகள் நிறைந்துள்ளது. மேலும் இதில் பாலிஃபீனால்கள், கரோட்டினாய்டுகள், ப்ளேவோனாய்டுகள் மற்றும் டானின்கள் இருப்பதால், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.

 எடையைக் குறைக்க:

கொய்யா இலையின் மூலம் விரைவில் உடல் எடையின் மாற்றத்தைக் காணலாம். அதற்கு கொய்ய இலையை அரைத்து சாறு எடுத்து, தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதனால் காம்ப்ளக்ஸ் ஸ்டார்ச்சுகள் சர்க்கரைகளாக மாற்றப்படுவது தடுக்கப்படும்.

நீரிழிவு நீரிழிவு நோயாளிக்கு;

கொய்யா இலையைக் கொண்டு டீ தயாரித்து குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம். அதிலும் இந்த டீயை தொடர்ந்து 12 வாரங்கள் குடித்து வந்தால், இரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம்.

கொலஸ்ட்ராலைக் குறைக்க:

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஆராய்ச்சி ஒன்றில் தொடர்ந்து மூன்று மாதங்கள் கொய்யா இலை டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறைந்து, நல்ல கொழுப்புக்களின் அளவு பராமரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

கல்லீரல் :

கொய்யா இலை கல்லீரலுக்கான சிறந்த டானிக்

 வயிற்றுப்போக்கு:

வயிற்றுப்போக்கு உள்ளவர்கள், 30 கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன் சேர்த்து, 1-2 டம்ளர் நீரில் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வர வயிற்றுப்போக்கிற்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

செரிமானத்தை அதிகரிக்கும்:

செரிமான பிரச்சனை இருந்தால், கொய்யா இலையின் டீயை குடித்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, செரிமானம் நடைபெறும்.

கொய்யா இலை வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வயிற்றினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

 வயிற்று வலி கடுமையான வயிற்று வலியால் அவஸ்தைப்பட்டு வந்தால், 8 கொய்யா இலையை, 1 1/2 லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி, தினமும் மூன்று முறை குடித்து வர, வயிற்று வர நீங்கும்.

மூச்சுக்குழாய் அழற்சி மூச்சுக்குழாய் அழற்சியால் கஷ்டப்பட்டு வந்தால், கொய்யா இலையின் டீயை குடித்து வாருங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

தொண்டைப்புண், பல் வலி, ஈறு நோய்கள் பிரஷ்ஷான கொய்யா இலை பல் வலி, ஈறு பிரச்சனைகள் மற்றும் வாய்ப் புண், தொண்டைப்புண் போன்வற்றை சரிசெய்ய உதவும். அதற்கு அதனை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம் அல்லது அதனை டீ போட்டு குடிக்கலாம்.

 புரோஸ்டேட் புற்றுநோய் கொய்யா இலை ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் விரைப்பை வீக்கம் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க உதவும். விந்தணு உற்பத்தி ஆண்கள் கொய்யா இலையை டீ போட்டு குடித்து வந்தால், விந்தணுவின் உற்பத்தி அதிகரிப்பதோடு, விந்தணுவின் தரமும் அதிகரிக்கும்.

கொய்யா இலை டீ செய்முறை:

 கொய்யா இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ, நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்...

உமீழ் நீர் உயிர் நீர்

சர்க்கரை நோய்க்கான எளிய முற்றிலும் இலவசமான,  இயற்கை மருந்து!!

சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?

உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து!!`

உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் ,  அதிக அளவு  எடுத்துக் கொண்டனர்!!

வாழ்வதற்காக  உண்டனர்!  உண்பதற்காக வாழ்ந்தனர்!

அதனால்தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்!!

அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்!!

 உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை!!

தூண்டல், துலங்கல்" என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது!

நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர்!!

தற்காலத்தில் நாம் மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு வேலை பார்க்கிறோம்!!

அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.  உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது!

வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்!

உணவை ரசித்து, ருசித்து உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்!!

நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது!

 உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்!

நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது!!

சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்!!

எனவே; நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்!

நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட  உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும்!!

நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்!!

இந்த உண்மையை உலகிற்கு சொல்வதால், சர்க்கரை நோயை வைத்துப் பிழைப்பு நடத்தும் பணப்பேய்கள் என்னைத் தீவிரமாகத் தேடி அலைவார்கள்.  அந்தப் பணப் பேய்களிடமிருந்து நம் மக்களை மீட்க வேண்டும்.

எனவே இதை அதிக நபர்களுக்குப் பகிருங்கள்!

நொறுங்கத் தின்னா நூறு வயசு..

உமீழ் நீர் உயிர் நீர்.

சர்க்கரை வியாதியை குறைக்கும் கஷாயம்

சர்க்கரை வியாதியை குறைக்கும்  கஷாயம்... நான்கு வெற்றிலை, முருங்கைக்கீரை சிறிதளவு, வேப்பங்கொழுந்து இரண்டு கொத்து போன்றவற்றை சுத்தம் செய்த...