Tuesday, July 17, 2018

பூக்களின் மருத்துவ குணங்கள்.... part 2

நோய்களை குணமாக்கும் பூக்கள்...
தாழம்பூ

தாழம்பூவை சர்பத் செய்து மாதம் இருமுறை சாப்பிட அம்மை நோய் வராமல் தடுக்கலாம்.

ரோஜா இதழ்
ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

வாழைப்பூ
வாழைப்பூவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும்.

நந்தியாவட்டை



ஒத்த நந்தியாவட்டையை கண்களின் மீது வைத்து வந்தால் கண் எரிச்சல் குணமாகும். குளிர்ச்சியடையும்.




மருதோன்றி பூ 




மருதோன்றி பூவை இரண்டு நாள் இரவில் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.




தாமரை இதழ்




தாமரை இதழை தினமும் ஒன்று சாப்பிட்டால் பேசும் திறன் அதிகரிக்கும்.




தென்னம் பூ




தென்னம்பூவை வெறும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் உள்ரணம் குணமடையும்.




ஆவாரம்பூ




ஆவாரம் பூவை பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வர உடலுக்கு பலம் கூடும்.




செம்பருத்தி பூ




செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியடையும்.




மாதுளம் பூ




மாதுளம் பூவை கஷாயம் செய்து குடிக்க வயிற்றுக்கடுப்பு குணமாகும்.




வில்வப்பூ 




வில்வப் பூக்களை புளி சேர்த்து ரசம் வைத்துச் சாப்பிட்டு வர குடல் வலிமை பெறும்.




மாம்பூ 




உலர்ந்த மாம்பூ, சீரகத்தை சேர்த்து தூள் செய்து சர்க்கரை சேர்த்து சாப்பிட உஷ்ணபேதி குணமாகும்.




பூக்களின் மருத்துவ குணங்களை பற்றி தெரிந்து கொண்டோம்...

இதை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்வோம்...
நன்றி....

No comments:

Post a Comment

சர்க்கரை வியாதியை குறைக்கும் கஷாயம்

சர்க்கரை வியாதியை குறைக்கும்  கஷாயம்... நான்கு வெற்றிலை, முருங்கைக்கீரை சிறிதளவு, வேப்பங்கொழுந்து இரண்டு கொத்து போன்றவற்றை சுத்தம் செய்த...